Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்

சஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பாக கட்சிக்குள் நிலவிய சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
இதற்கமைய ரஞ்சித் மத்துமபண்டார , இம்தியாஸ் பாகீர்மாகார் , திஸ்ஸ அத்தநாயக்க , ஹரீன் பெர்ணான்டோ , மாயந்த திஸாநாயக்க , இரான் விக்கிரமரட்ன மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர்களை அந்த பட்டியலில் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணியும் , முஸ்லிம் கட்சிகளும் தேசியப் பட்டியல் ஆசனத்தில் தமக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை விடுத்திருந்த போதும் 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளதால் அதனை பங்கிடுவதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கட்சிக்குள் கலந்துரையாடி தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு பட்டியலை இறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *