Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித் தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ரணில்

சஜித் தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சஜித் பிரேமதாச தரப்பினரால் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தான் நிராகரிப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் இன்றைய தினம் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பொறிமுறைகளுக்கான பொறுப்புகளை சிறிகொத்தா ஊடாக முறையாக செயற்படுத்தியதாகவும் நிதி தொடர்பாக பொறுப்புகள் அதிகாரிகள் குழுவிடம் இருக்கவில்லையெனவும் இதனால் அது தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தான் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கட்டியெழுப்பு புதிய ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தான் எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *