Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய்க்கு விளக்கமறியல்

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய்க்கு விளக்கமறியல்
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயை எதிர்வரும் 10ம் திகதி வரையும் விளக்கமறியிலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்;ட நிலையில் கடந்த மாதம்  8ம்திகதி சிசு ஒன்றின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவைலத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தர்மபுரம் பொலிசார் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சடலமாகமீட்கப்பட்ட  சிசுவின் தாயென சந்தேகிக்கும் பெண்ணொருவரைக் கைது செய்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கையினை கடந்த (13-05-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சமர்பித்ததையடுத்து குறித்த சந்தேக நபரை கடந்த  (13-05-2016) பிற்பகல் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேரடியாக சென்று பார்வையிட்ட நீதிவான்   மேற்படி சந்தே நபரை  27ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டநிலையில் மரணம் தொடர்பான  சடல பரிசோதனை மேற்கொள்ளப்டமைக்கான சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைக்க வில்லை என்றும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப் பட்ட வருவதாகவும் பொலிசார் தெரிவித்ததையடுத்து மீண்டும் குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 10ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் வள்ளிபுனம் புதுக்;குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் என்றும் இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்;து விட்டதாகவும் தற்போது சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் படையாளியாக கடமையாற்றி வருவதுடன்  வேலை நிமிர்த்தம் இராமநாதபுரம் பகுதியில் தங்கியிருந்;தபோதே இவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்; இருந்து தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *