Search
Monday 21 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சட்டமா அதிபரின் வாக்குறுதியையடுத்து போராட்டத்தை கைவிட்ட சட்டத்தரணிகள்

சட்டமா அதிபரின் வாக்குறுதியையடுத்து போராட்டத்தை கைவிட்ட சட்டத்தரணிகள்

சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா சிரேஷ்ட சட்டதரணியும் வன்னி வலய சட்டதரணிகள் சங்க உபதலைவருமான அன்ரன் புனிதநாயகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வழங்கிய உறுதிமொழியையடுத்தும் இதுவரை நாட்களாக நடைபெற்று வந்த சட்டதரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று முதல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படும் என வழங்கிய வாக்குறுதியையடுத்தும் பிரதி சொலிஸ்ட ஜெனரல் குமார் ரட்ணம் முல்லைத்தீவு சட்டதரணிகள் சங்க செயலாளர் சட்டதரணி எஸ்.கெங்காதரனை தொடர்புகொண்டு வழங்கிய உறுதிமொழியையடுத்தும் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.அத்தோடு சட்டதரணிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு தொடர்பிலும் முல்லைத்தீவு பொலிஸாரால் B1218/19 ,B1219/19 என்ற பி அறிக்கை முல்லைத்தீவுக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்ட்டுள்ளது .

ஆகவே இதுவரை நாட்களாக வடக்கு சட்டதரணிகள் மேற்கொண்ட போராட்டதுக்கு ஆதரவளித்த கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாவட்ட சட்டதரணிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஏனைய வழிகளில் ஆதரவினை வழங்கிய சிவில் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் சட்டதரணி எஸ் .கெங்காதரன் தெரிவித்தார் .(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *