Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் யாழிற்கு இன்று விஜயம்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் யாழிற்கு இன்று விஜயம்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார பொலிஸ் மா அதிபர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழிற்கு விஐயம் செய்துள்ளனர்.யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விஐயத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்திரையாடலிற்காக வருகைதந்த அமைச்சருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.இதன் போது பொலிஸ் அதிகாரிகளையும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.மேலும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் பொலிஸ் மா அதிபர் விஐயம் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *