Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சமீபத்தைய சர்ச்சைகளை மறந்து விட்டு அணி வீரர்கள் குறித்து கவனம் செலுத்தப்போகின்றேன்- ரவி சாஸ்திரி

சமீபத்தைய சர்ச்சைகளை மறந்து விட்டு அணி வீரர்கள் குறித்து கவனம் செலுத்தப்போகின்றேன்- ரவி சாஸ்திரி

இந்திய அணி சமீபத்தில் சில சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில் அணியின் புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி அனைத்தையும் மறந்துவிட்டு வீரர்கள் குறித்து கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு இந்திய அணி புறப்படுவதற்கு முன்னர் நிருபர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரவி சாஸ்திரி இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடந்த மூன்று வருடங்களாக மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றது அவர்களே அதற்கான பாராட்டுக்குரியவர்கள் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ரவிசாஸ்திரியும் கும்ளேயும் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்திய கிரிக்கெட் உறுதியாகயிருக்கும் இதற்கான பெருமை இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த மூன்று வருடங்களில் விளையாடியவர்களிற்கே செல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

265648
இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் அவர்கள் கடந்த மூன்று வருடங்களில் வெளிப்படுத்தியுள்ள கடினமான முயற்சியே காரணம் அந்த பெருமை அவர்களிற்கே செல்லவேண்டும் எங்களை போன்றவர்கள் வருவார்கள் போவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது உங்கள் மனோநிலை தெளிவாகயிருக்கவேண்டும் வெளியே நடைபெறும் எது குறித்தும் கவனம் செலுத்தமால் அணி குறித்து கவனம் செலுத்தவேண்டும் ஓவ்வொரு வீரர் மத்தியிலும் அந்த மனோநிலையை உருவாக்குவதே எனது பணி என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
2015 இல் இலங்கைக்கான இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி எங்களால் இந்திய மண்ணிற்கு வெளியே வெல்ல முடியும் அதற்கான வீரர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையை அந்த தொடரே தந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 இல் காலியில் முதல் டெஸ்ட் போட்டியை தோற்றவுடன் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் ஆனால் அணியில் அந்தவேளை காணப்பட்ட எதிர்த்து போரிடும் கலாச்சாரம் காரணமாகவே எங்களால் தொடரை கைப்பற்ற முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *