தலைப்பு செய்திகள்

சம்பந்தனின் தோல்வி

சம்பந்தனின் தோல்வி

யதீந்திரா

கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு பார்வைதான். ஆனால் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றல் என்று வர்ணிக்கப்படும் மேற்படி அனுகுமுறைதான் சம்பந்தன் தமிழ்ச் சூழலில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான காரணமாகவும் இருக்கிறது. எனெனில் சம்பந்தனை சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மக்களும் சேர்ந்து தெரிவுசெய்யவில்லை. சம்பந்தன் இந்த இந்த நாட்டிற்கான தலைவராக இருந்தால் ஏன் தேர்தல் காலங்களில் தான் பிரதிநிதித்துவம் செய்யும் திருகோணமலையில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கவில்லை? முஸ்லிம்களிடம் சென்று வாக்குக் கேட்கவில்லை? 2015இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது சம்பந்தன் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். அதாவது, முஸ்லிம் மக்களிடமிருந்து சில ஆயிரம் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கலாம் என்பதுதான் அது. ஆனால் இப் பத்தியாளரோ சில ஆயிரம் அல்ல, சில நூறுகள் கூட கிடைக்காது என்று எழுதியிருந்தார். இந்தப் பத்தியாளர் கூறியதே இறுதியில் நடந்தேறியது. சம்பந்தன் தொடர்பில் பேசும் பலரும் அவரை ஒரு பழுத்த அரசியல் வாதி என்று வர்ணி;ப்பதுண்டு. ஒரு பழுத்த அரசியல்வாதியால் எப்படி இவ்வாறு சிறு பிள்ளைத்தனமாக பேச முடிந்தது?

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சம்பந்தன் தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் – தான் ஒரு இராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறிந்திருக்கிறார். இராஜதந்திரம் என்னும் சொல்லின் ஆழம் அறியாத தமிழரசு கட்சியின் உறுப்பினர்களும் சம்பந்தனை கண்மூடித்தனமாக நம்பும் அவரது ஆதரவாளர்களும் ஜயாவின் ராஜதந்திரக் கதைகளை ரசித்தனர். ஆனால் ஜயாவின் இராஜதந்திரப் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? இதுவரை அவரது போராட்டம் எந்தெந்த விடயங்களையெல்லாம் வெற்றி கொண்டிருக்கிறது?

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக வந்த போது அது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சம்பந்தன் அந்தப் பதவியை ஏற்கக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய நிலையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் சாரம்சமாக இருந்தது. ஆனால் அப்போது இந்தப் பத்தியாளரோ அதனை வேறு விதமாக பார்த்திருந்தார். அதாவது, அனைத்துலக ராஜந்திர அரங்கிற்குள் தமிழ் இனத்தின் நிலைப்;பாடுகளை ஆணித்தரமாக முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக சம்பந்தன் தனது எதிர்க்கட்சிப் பதவியை பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தன் அவ்வாறாதொரு தூர நோக்குடன்தான் அந்தப் பதவியை பார்க்கிறார் என்னும் பார்வையும் இந்தப் பத்தியாளரிடம் இருந்தது ஆனால் இறுதியில் சம்பந்தனோ அந்தப் பதவியை தமிழ் இனத்திற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளாமல் மாறாக, கொழும்மை பாதுகாப்பதற்கான ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். சம்பந்தன் ராஜதந்திர அரசியலில் ஒரு முதிர்ச்சி வாய்ந்தவராக இருந்திருந்தால் இந்த நிலைமையை அவ்வாறு கையாண்டிருக்கமாட்டார். ஏனெனில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்த காலமும், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக வந்த காலமும் முற்றிலும் வேறுபட்டது.

தமிழ் மிதவாத அரசியல் முற்றிலும் செயலிழந்து ஆயுதப் போராட்டம் எழுச்சிபெற்றுவந்த ஒரு காலத்தில்தான் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார் ஆனால் சம்பந்தனோ ஒரு உள்நாட்டு யுத்தத்தின் முடிவி;ற்கு பின்னரான காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருந்தார். சிறிலங்காவின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் வகையில் சம்பந்தனின் முதல் கடமை அத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் பொறுப்பை வலியுறுத்துவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதில் எந்தவொரு சமரசங்களுக்கும் இடமில்லை என்பதுதான் சம்பந்தனின் நிலைப்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ புதிய ஆட்சியாளர்களான மைத்திரி – ரணில் தரப்பை அனைத்துலக மட்டத்தில் புகழ்ந்து பேசும் வேலையையே செய்து கொண்டிருந்தார். அதனைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்.

2016இற்குள் ஒரு நல்ல தீர்வு உண்டு என்றார். பின்னர் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார். ஒரு நியாயமான தீர்வை முன்வைக்காவிட்டால் நாங்கள், எங்களை கொழும்பால் ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார். சில நாட்களுக்கு முன்னர், சுமந்திரனும் ஏதோ வடக்கு கிழக்கை முடக் போவதாகக் கூறியதாக செய்திகளில் பார்க்க முடிந்தது. இவையெல்லாம் தங்களது தோல்வியை மறைப்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் பரபரப்புக்கள். ஒரு கேள்வியை கேட்டுப் பாருங்கள் – சரி எப்படி முடக்குவீர்கள்? சம்பந்தனிடமோ சுமந்திரனிடமோ பதில் இருக்கப் போவதில்லை.

இராஜதந்திரம் என்பது அரசியல் மேடைகளில் உச்சரிக்கும் ஒரு விடயமல்ல அல்லது அவ்வப்போது தங்களது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசிச் செல்லும் விடயமுமல்ல மாறாக, அது செயலில் நிரூபிக்கப்பட வேண்டிய விடயம். அதற்கு முதலில் ஒரு பலமான அடித்தளம் இருக்க வேண்டு;ம். ஏனெனில் அனைத்துலக உறவு என்பது அடிப்படையில் நாடுகளுக்கு இடையிலான உறவேயன்றி கட்சிகளுக்கு இடையிலான உறவல்ல. பலவீனமான நிலையில் நின்றுகொண்டு, அனைத்துலக ராஜதந்திர அரசியலில் சாதிக்க முடியுமென்று நம்புவது, கல்லில் நாருரிக்கும் ஒரு முயற்சிதான். இன்று சம்பந்தன் கூறிவரும் ராஜதந்திர போராட்டம் என்பதும் கூட, அவ்வாறானதொரு கல்லில் நாருரிக்கும் முயற்சிதான்.

ராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கருத்துண்டு. 1821இல் முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்து இன்றும் உலகளாவிய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு கருத்தாகவே இருக்கிறது. அதாவது, ஆயுதமில்லாத ராஜதந்திரம் (னுipடழஅயஉல றiவாழரவ யசஅள) என்பதுஇசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு (அரளiஉ றiவாழரவ iளெவசரஅநவெள) ஒப்பானதாகும். ‘ஆயுதமில்லாத’ என்னும் சொல்லுக்கு பதிலாக பலமில்லாத (குழசஉந) என்னும் சொல்லை பிற்காலங்களில் நெப்போலியன் பயன்படுத்தினார். இன்றுவரை அதுதான் உலக யதார்த்தம். பலமில்லாமல் ராஜதந்திர அரசியலில் ஈடுபடலாம் என்று எண்ணுபவர்கள் இசைக்கருவியில்லாமல் இசையமைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்தான். சம்பந்தன் அவ்வப்போது கூறிவரும் ராஜதந்திரமும் அவ்வாறனதொரு இசைக்கருவியில்லாது இசையமைக்கும் ஒரு முயற்சிதான். தமிழர்களின் பலமாக இருந்த ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களிடம் இருந்த ஒரேயொரு பலம் ஜனநாயக அரங்கில் தமிழ்த் தேசியத்தை ஒரு வலுவான சக்தியாக திரட்டியெடுத்து, அதனைக் கொண்டு பேரம் பேசுவது ஒன்றே.

அவ்வாறு பேரம் பேச வேண்டுமாயின் அதற்கு தமிழ்த் தேசியம் ஒரு வலுவான கட்டமைப்புடன் தனித்து நிற்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ கொழும்பின் நிகழ்சி நிரலுடன் இணைந்து அரசியலை கையாள முற்பட்டார். அதுதான் சம்பந்தன் விட்ட மிகப்பெரிய தவறு. கொழும்பின் ஏற்பாடுகளான, அரசியலமைப்புப் பேரவை, வழிகாட்டல் குழு, சர்வதேச அரங்குகளில் அரசாங்க பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனும் பங்குகொள்ளுதல் என்று அனைத்து நகர்வுகளிலும் கொழும்பின் சம்பந்தியாகத்தான் சம்பந்தன் இருந்தார். உண்மையில் அரசியல் தீர்வு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்கான பதில் சொல்லும் பொறுப்பு உங்களுடையது, நீங்கள் அதனைச் சொல்லுங்கள் அதன் பின்னர் உங்களுடன் பேசுவது தொடர்பில் யோசிக்கலாம் என்னும் தனித்துவமான நிலைப்பாட்டை சம்பந்தன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ எந்த அரசு பொறுப்புக கூற வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறதோ அந்த அரசாங்கத்தை புகழ்ந்து போசிக் கொண்டு, அதனைக் காப்பாற்றிக் கொண்டு தீர்வைக் காணலாம் என்று சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருந்தார். அரசு, எதிர்கொண்டுவரும் அனைத்துலக நெருக்கடிகளை பயன்படுத்தி எடுக்கக் கூடியவைகளை எடுத்துக் கொள்ளும் உபாயம் தொடர்பில் சிந்திக்காமல், அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு உதவுவதன் மூலம் விடயங்களை சாதிக்கலாம் என்று சம்பந்தன் எண்ணினார். இந்த இடத்திலேயே சம்பந்தனின் அனைத்து நகர்வுகளும் தோல்வியடைந்தன. சம்பந்தனது ராஜதந்திரமும் படு தோல்வியடைந்தது.

சம்பந்தன் தற்போது கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய ஆளுமையில் மட்டுமல்ல, தன்னால் கொண்டுவரப்பட்ட சுமந்திரனையே கட்டுப்படுத்த முடியாதவராக இருக்கின்றார். இன்று அதற்காக கவலையும் படுகின்றார். அன்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நூல் வெளியீட்டின் போது, ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் இப்படிக் கூறி கவலைப்பட்டிருக்கிறார். அதாவது, சுமந்திரனை கட்டுப்படுத்தாமல் விட்டது ஒரு தவறுதான். அதனை இப்போது உணர்கிறேன். சுமந்;திரனது பேச்சுக்கள் எல்லைமீறிவிட்டன. அதற்கு உதாரணமாக அன்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு சுமந்திரன் தெரிவித்திருந்த பதிலை சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழர் பிரச்சினையை ஜ.நா பாதுகாப்புப் பேரவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். அதனை எதிர்த்திருந்த சுமந்திரனோ, அவ்வாறு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவித்திருக்கிறார். அவ்வாறு கொண்டுபோக வாய்ப்பிருந்தால் கொண்டு போகட்டுமே அதனை ஏன் நாம் எதிர்க்க வேண்டும் என்று சம்பந்தன் அந்தப் பத்திரிகையாளரிடம் குறி;ப்பிட்டிருக்கிறார். ராஜதந்திரப் போராட்டம் செய்யப் போவதாகக் கூறிய சம்பந்தனோ இறதியில் தனது கட்சியைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார். வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வெளியேற்றும் விடயத்தில் சம்பந்தனே எதிர்த்தாலும் கூட, தனது கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரிடம், சுமந்திரனால் கூறமுடிகின்றதென்றால், கட்சியில் சம்பந்தனின் இடம் என்ன? ஒரு அரசியல் தீர்வை கொண்டுவருவேன், புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவோம், ராஜதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறேன் என்றெல்லாம் கூறிய சம்பந்தன், இறுதியில், திருகோணமலை நகரசபைக் கூட்டம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று பார்வையிடச் சென்றிருக்கிறார். சம்பந்தன் இப்போது தமிழ் மக்களின் தலைவராகவும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராகவும் இல்லை. தமிழசு கட்சியை தீர்மானிக்கவல்ல தலைவராகவும் இல்லை. இதன் பின்னரும் சம்பந்தன் அரசியலில் இருப்பது சரியான ஒன்றாக இருக்க முடியுமா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *