Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சரணடைந்த மச்சயக்காளை கண்ணன் திருமலை கடற்படை முகாமில் : மனைவி ஆணைக்குழு முன் சாட்சியம்

சரணடைந்த மச்சயக்காளை கண்ணன் திருமலை கடற்படை முகாமில் : மனைவி ஆணைக்குழு முன் சாட்சியம்

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி குழுவின் கிளிநொச்சி மாவட்டத்;திற்கான சாட்சி பதிவு செய்யும் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (26-04-2016) காலை ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றது.

ஆணைக்குழவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் நேற்று (25-04-2016) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான சாட்சிகளை பதிவு செய்யும் அமர்வுகள் எதிர்வரும் 28ம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் கரைச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 362 பேருக்கு விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நேற்றைய சாட்சியமர்வில் 271 பேர் தமது சாட்சியங்களை பதிவு செய்;ததுடன் 69 பேர் புதிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

28ம்திகதி வரை நடைபெறவுள்ள இவ் அமர்வில் 1166 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரிடம் வட்டுவாகலில் வைத்து ஒப்படைத்த எனது கணவர் திருகோணமலை புல்மோட்டை கடற்படை முகாமில் இருப்பதாகவும் அவரை விடுவதாக பலர் ஏமாற்றி பணத்தினை பெற்றுள்னர் என இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள மச்சயக்காளை கண்ணன் அவர்களது மனைவி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ளார்.

Missing commission inquiry  (2) Missing commission inquiry  (4)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *