Search
Wednesday 18 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்வதேச சமூகத்தை தவிர்க்கின்றார் ஆங் சாங் சூச்சி

சர்வதேச சமூகத்தை தவிர்க்கின்றார் ஆங் சாங் சூச்சி

மியன்மார் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் ஆன் சாங் சூச்சி ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தீவிரவாதிகளினால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் கவனம் செலுத்துவதன் காரணமாகவும் அவர் இம்முறை ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை கட்டுப்படுத்த முயல்கின்றார்,அமைதியையும் ஸ்திரதன்மையையும் ஏற்படுத்த விரும்புகின்றார் இனமோதலை தடுக்க முயல்கின்றார் என ஆங் சாங் சூச்சியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே ஆங் சாங்சூச்சி ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரை தவிர்க்கின்றார் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன
கடந்த வருடம் பொதுச்சபையில் உரையாற்றியவேளை ரொகிங்யா நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தனது அரசாங்கம் பின்பற்றும் நடவடிக்கைகளை அவர் நியாயப்படுத்தியிருந்தார்.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *