Search
Saturday 23 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு-டிவிலியர்ஸ் தீடீர் அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு-டிவிலியர்ஸ் தீடீர் அறிவிப்பு

அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப்போவதாக தென்னாபிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏபிடிவிலியர்ஸ் அறிவித்துள்ளார்.
நான் களைத்துப்போய்விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்
2018 ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் அணிக்காக சில நாட்களிற்கு முன்னர் இறுதியாக விளையாடியிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உடனடியாக நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளேன் என அவர் வீடியோவொன்றில் தெரிவித்துள்ளார்.
114 டெஸ்ட்போட்டிகள் 228 ஓருநாள் போட்டிகள் மற்றும் 78 ரி20 போட்டிகளில் விளையாடி விட்டேன் இனி மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டிய தருணம் என குறிப்பிட்டுள்ள அவர் நான் களைத்துப்போய்விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் கடினமான முடிவு நான் நீண்ட காலமாக சிந்தித்து வந்தேன்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *