தலைப்பு செய்திகள்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செல்லும் இலங்கையின் முதலாவது செய்மதி ” ராவணா 1″

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செல்லும் இலங்கையின் முதலாவது செய்மதி ” ராவணா 1″

இரண்டு இலங்கை பொறியியலாளர்களினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ” ராவணா 1″ என்ற செய்மதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் 400 கிலோமீற்றர் ஒழுக்கில் இன்று வியாழக்கிழமை ஏவப்பட்டுள்ளது. நாசாவின் சிக்ணஸ் என்ற விண்கலத்தில் அதிகாலை 2.16 மணிக்கு இது செலுத்தப்பட்டதாக ஆதர் சி கிளார்க் நிலைய பணிப்பாளர் கவிந்திர ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 20 ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணையவிருக்கும் அங்குள்ள சிக்ணஸ் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பகுதியினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

உருளை வடிவமான இந்த செய்மதி இரு இளம் பொறியியலாளர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சமிக்க அகியோரினால் தயாரிக்கபப்ட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளர்களான இவர்கள் ஆதர் சி கிளார்க் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றுகின்றனர்.

1000 கியூபிக் சென்றி மீற்றர்கள் அளவிலும் 1.1 கிலோ கிராம் நிறயையும் கொண்ட இந்த செய்மதியை இவர்கள் ஜப்பானின் குஷு தொழிநுட்ப நிறுவனத்தில் தயாரித்துள்ளனர்.

இலங்கையர்களால் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு செல்லும் இலங்கையின் முதலாவது செய்மதி என்ற பெருமையை இது பெறுகிறது.

1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *