Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்வாதிகார போக்கில் செல்லும் அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது-அகில விராஜ் காரியவசம்

சர்வாதிகார போக்கில்  செல்லும் அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது-அகில விராஜ் காரியவசம்

சர்வாதிகாரமான அரச நிர்வாகத்தின் ஆரம்பம் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய விளைவினை ஏற்படுத்தி முழுமையாக ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும்.மக்களாணையினை பெற்று ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தற்போது ஜனநாயகத்திற்கு புறம்பாக சர்வாதிகார போக்கில் செல்கின்றது. இந்த அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது. முறையற்ற செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே பதிலடியை வழங்குவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நல்லாட்சி அரசாங்கத்திற்கு முற்பட்ட அரசாங்கம் ஜனநாயக ரீதியில் பெற்றுக்கொண்ட மக்களாணையினை சர்வாதிகாரமான முறையில் பிரயோகித்து தங்களின் தனிப்பட்ட அரசியல் பகைமையினை தீர்த்துக்கொண்டது. நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட முறையற்ற செயற்பாடுகள் இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *