Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஹரானின் செயற்பாடுகளை பொலிஸார் கண்டுகொள்ளவில்லை : தெரிவுக்குழு முன் அசாத்சாலி

சஹரானின் செயற்பாடுகளை பொலிஸார் கண்டுகொள்ளவில்லை : தெரிவுக்குழு முன் அசாத்சாலி

சஹரான் உள்ளிட்ட குழுவினர் காத்தான்குடி பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டில் 120 வீடுகளுக்கு தீ வைக்கப்படும் போது முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த போதும் அது பற்றி பொலிஸார் கவனம் செலுத்தவில்லையெனவும் பொலிஸார் அவர்களுடன் சேர்ந்து வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாங்கள் கடந்த பல வருடங்களாக அந்த குழுவினர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூறி வந்த போதும் யாரும் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கவில்லையெனவும் பொலிஸாரும் அவர்களை கைது செய்ய நடவடிக்கையெடுத்திருக்கவில்லையெனவும் அசாத்சாலி தெரிவித்துள்ளார். அந்த குழுவினர் ஐ.எஸ் அமைப்பின் பெனர்களுடன் பேரணி சென்ற போதும் பொலிஸார் அவர்களை கண்டு கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவேளை முன்னாள் அமைச்சர் ஹலீமின் சகோதரர் ஒருவர் தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு உதவியுள்ளதாகவும் அசாத்சாலி தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *