Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஹரான் பற்றி தெரிவுக்குழு முன்னிலையில் ஹிஸ்புல்லா கூறியவை

சஹரான் பற்றி தெரிவுக்குழு முன்னிலையில் ஹிஸ்புல்லா கூறியவை

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது சஹரானை சந்தித்திருந்ததாகவும் அந்த காலப்பகுதியில் மத குழுவொன்றின் தலைவராகவே இருந்தார் எனவும் அப்போது அவர் பயங்கரவாதியாக இருக்கவில்லையெனவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஹரான் எப்போதும் தனக்கு எதிராகவே செயற்பட்டுள்ளதாகவும் தேர்தல் காலத்தில் கூட்டங்கள் தொடர்பாக அவருடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்த போதும் அவர் தனக்கு எதிராகவே செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தான் மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்திருந்த போது சஹரான் மைத்திரிபால சிறிசேன தரப்பினரை ஆதரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே ஹிஸ்புல்லா இதனை தெரிவித்துள்ளார்.
2015 பாராளுமன்ற தேர்தலின் போது அவரை சந்திக்க வருமாறு காத்தான்குடியில் சகல கட்சிகளையும் அவர் அழைத்திருந்ததாகவும் அவருடன் இளைஞர்கள் இருந்தமையினாலும் அவர் சிறந்த பேச்சாளர் என்பதனாலும் தான் அவரிடம் சென்றதாகவும் இதன்போது கூட்டங்களில் பாட்டுகளை போட முடியாது. போன்ற கட்டுப்பாடுகளை விதித்து அவர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட கூறியதாகவும் அதன்படி தானும் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே தற்போது தான் அவருடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் சஹரான் அந்த பிரதேசத்தில் இருக்கவில்லையெனவும் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னரே அவர் பயங்கரவாதி என்பதனை தான் அறிந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னை அரசியலிலிருந்து நீக்குவதற்காக செயற்பட்டவர் எனவும் அவர் இறந்துள்ளமையை அறிந்து அடுத்த தேர்தலில் அவரின் பிரச்சினை இருக்காது என்று எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *