தலைப்பு செய்திகள்

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்கமுன்வரவேண்டும் என கா.பொ.த.உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்தார்.மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இருந்து முதன்முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தினை உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மாணவன் துதிசான் படைத்துள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் மூன்று பாடங்களில் பீ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதாரணதரம் கற்றதுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாயத்தில் உயர் கல்வியையும் கற்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த அவர்,எதிர்காலத்தில் தமது சமூகத்திற்கு சிறந்த கல்வியினையும் சேவையினையும் வழங்கும் வகையில் ஒரு விரிவுரையாளராக வருவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்..

தான் எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்தபோதும் எனது இலக்கு கல்வியி; உச்ச நிலையினேயே அடையவேண்டும் என்பதாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

DSC06825 DSC06829 DSC06831


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *