Search
Monday 19 August 2019
  • :
  • :

சிங்கள பாடசாலையினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் கோரிக்கை

சிங்கள பாடசாலையினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் கோரிக்கை

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சர்வமத குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் போது, இந்துமத குருமார்கள், ஓய்வூதியம் மற்றும் இந்து குருமார் ஒன்றியத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தனர்.
அதன்போது, பலாலி ஆசிரியர் கலாசாலை மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை என்பவற்றினை சொந்த இடத்தில் இயக்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதுடன், 512ஆவது படைமுகாம் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
மும்மொழிகளையும் கற்பிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், சிங்களமொழியினைக் கற்பிப்பதற்கும், சிங்கள மகா வித்தியாலயத்தினை இயக்குவதன் மூலம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறந்ததாக இருக்குமென்றும் சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன், அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சிங்கள மகா வித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவதாக உறுதியளித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *