Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்

சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்

பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது.காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பாண்மை இனம் துணை நிற்பது வருத்தமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாண்மை தமிழ் மக்களினால் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டிருந்தாலும் மற்றுமொரு பெரும்பாண்மை இனத்தை சார்ந்தவர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.இதேவேளை பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது.மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை ஒற்றுமையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும் என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது என தெரிவித்த அவர் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சிங்கள மக்களும் இதை புரிந்துகொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *