Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை வடக்கு முதல்வர் நேரடியாக சந்திப்பு (மேலதிக இணைப்பு)

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை வடக்கு முதல்வர் நேரடியாக சந்திப்பு (மேலதிக இணைப்பு)

சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை அவர்களின் அவர்களின் முகாமுக்கு சென்று சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்தபோதே பல ஆண்டுகாளாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து இந்த மக்களை சந்தித்தார்.

தாங்கள் தற்போது வசிக்கும் நலன்புரி நிலையம் அமைந்துள்ள அரச காணிகளில் இருந்து வெளியேறுமாறு அரச அதிகாரிகளால் பலவந்தப்படுத்தப்படுவதாக அவர்கள் முதலமைச்காரிடம் முறையிட்டதுடன் இக் காணிகளிலேயே தம்மை குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும்இந்த மக்களின் நிலைமைகளை முதலமைச்சருக்கு எடுத்து கூறியிருந்தனர்.

இதன்போது வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ரோய் ஜெயக்குமார் உட்பட பலரும் நலன்புரி நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இச் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் த. குருகுலராஜா சிதம்பரபுரம் நிலன்புரி நிலையம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனினும் அரசாங்க அதிபர் இது வரை செய்யவில்லை என முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சர் அரசாங்க அதிபருக்கு 3 தடவைகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஞாபகமூட்டல்கள் வழங்கப்பட்டபோதிலும் மக்களுக்கு காணி வழங்குவதை செயற்படுத்தவில்லை. இங்குள்ள மக்கள் இங்கேயே வசிக்வும் விரும்புகின்றர். இவர்களின் இரண்டாவது தலைமுறையும் இங்கு வந்துள்ளது. அத்துடுன் இவர்களுக்கான தொழில்வாய்பபுகளும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இங்கிருந்த வேறு இடத்திற்கு செல்ல முடியாது. இந்த காணிகளை இங்குள்ள மக்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. போதுமான காணி காணப்படுகின்றது. அரை ஏக்கர் வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்க முடியும் என ஆணித்தரமாக முதலமைச்சருக்கு அவ்விடத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் முகாம் பற்றியும் அம் மக்கள் அவ் இடத்திலேயே குடியமர்த்தப்படவேண்டிய தேவை பற்றியும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன்போது முகாமில் உள்ளவர்கள் தாம் படும் இன்னல்கைள முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர். இவற்றை செவிமடுத்த முதலமைச்சர் இவ் விடயம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஒருங்கணைப்பு குழு கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவோம் என அமைச்சர் ப. சத்தியலிங்கத்திடம் தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த மக்களிடம் இவ் விடயத்தை நானாக செய்ய முடியுமாக இருந்தால் நான் செய்துவிடுவேன். அதனால் நாங்கள் தருவதாக கூறவில்லை. பார்க்கின்றோம் என்றே கூறியுள்ளோம். எனினும் இந்த முறை உரிய நடவடிக்கை எடுப்போம். இந் நிலையில் நீங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருப்பதற்கு பாருங்கள். அதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். நீங்கள் வேறு இடங்களில் காணி தருவதாக கூறி யாராவது அழைத்து செல்ல முற்பட்டால் எங்கும் செல்லாதீர்கள். இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு உடன் அறிவியுங்கள். வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் அவருக்கு உடன் அறிவியுங்கள்.
நாங்கள் தற்போது மத்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றோம் எனவே விரைவில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

 

DSC08382


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *