Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிரியாவில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றது ஈரான்- இஸ்ரேல் குற்றச்சாட்டு

சிரியாவில்  ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றது ஈரான்- இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் சிரியாவிலும் லெபனானிலும் ஏவுகணைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்
ஈரான் சிரியாவை தனது இராணுவநோக்கங்களிற்கான ஓரு தளமாக மாற்றிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இஸ்ரேலை இல்லாமல் செய்யும் தனது நோக்கினை நிறைவேற்றுவதற்காக ஈரான் சிரியாவை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சிரியாவில் ஈரானின் ஏவுகணை உற்பத்திநிலையங்கள் எந்த பகுதியில் உள்ளன என்ற விபரத்தை வெளியிட மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் எனினும் இதனை இஸ்ரேல் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்
இதேவேளை சில வாரங்களிற்கு முன்னர் இஸ்ரேலின் செய்மதி நிறுவனம் இது குறித்த செய்மதி புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *