Search
Sunday 20 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிரியாவில் குளோரின் வாயு தாக்குதல் இடம்பெற்றதை உறுதி செய்தது ஐநா அமைப்பு

சிரியாவில் குளோரின் வாயு தாக்குதல் இடம்பெற்றதை உறுதி செய்தது ஐநா அமைப்பு

சிரியாவில் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச இரசாயன ஆயுத பயன்பாடு குறித்த கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது குளோரின் செலுத்தப்பட்டுள்ளது என ஓபிசிடபில்யூ அமைப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி நான்காம் திகதி கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப்பில் இடம்பெற்ற தாக்குதல் குறித்தே ஓபிசிடபில்யூ அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் குளோரின் அடங்கிய இரு சிலின்டர்களை மீட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பலர் அளித்த வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்தும் இந்த முடிவிற்குவரமுடிகின்றது, சூழல் மாதிரிகள் வளியில் வழமைக்கு மாறான குளோரின் காணப்பட்டதை உறுதி செய்துள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களிடம் குளோரின் தாக்கத்திற்கு உட்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *