Search
Sunday 19 November 2017
  • :
  • :

சிறிய ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்வதில் வடகொரியா முன்னணியில்- ஜெனீவா நிபுணர்கள் குழு அறிக்கை

சிறிய ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்வதில் வடகொரியா முன்னணியில்- ஜெனீவா நிபுணர்கள் குழு அறிக்கை

உலகில் சிறிய ஆயுதங்களை இரகசியமாக விற்பனை நாடுகளில் வடகொரியா முன்னனியில் உள்ளதாக ஜெனீவாவை சேர்ந்த குழுவொன்று தெரிவித்துள்ளது.
வடகொரியா சவுதிஅரேபியா ஈரான் ஆகிய நாடுகள் ஏகே 47துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளன என ஜெனீவா அமைப்பு அதன் சிறியஆயுதங்கள் விற்பனை குறித்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறியவகை ஆயுதங்களை விற்பனை செய்யும் 55 வீத நாடுகள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றன என தெரிவித்துள்ள ஜெனீவா அமைப்பு 6 பில்லியன் டொலர் ஆயுதவிற்பனை உலகம் இன்னமும் இரகசியமானதாகவே காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இரகசியமாக விற்பனை செய்யப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கரங்களிற்கும் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்களின் கரங்களையும் சென்றடைகின்றன எவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது அவற்றில் பெரும்பாலானவை வடகொரியா மற்றும் சவுதிஅரேபியாவால் விற்பனை செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் எகிப்திய கடற்பரப்பில் இடைமறிக்கப்பட்ட வடகொரிய கப்பலிற்குள் சுமார் 30,000 ஆர்பிஜி ரொக்கட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் இதேபோன்று தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வடகொரியாவின் ஆயுதங்களை ஈரானிற்கு அனுப்பும் முயற்சியும் கண்டுபிடிக்கப்பட்டது என ஜெனீவாவை சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *