Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிறுமி கொலைக்கு நீதி கோரி பாக்கிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள்

சிறுமி கொலைக்கு நீதி கோரி பாக்கிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள்

பாக்கிஸ்தானில் கடந்த வாரம் ஏழு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
பாக்கிஸ்தானின் கசூர் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
புதன் கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை வியாழக்கிழமை பொதுமக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத்தொடங்கியதை தொடர்ந்து இராணுவபொலிஸார் நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
எங்களிற்கு நீதி வேண்டும் உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் வேறு எவரையாவது சுட்டுக்கொலை செய்யக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை ஏழு வயது சிறுமியின் உடல் குப்பைத்தொட்டியிலிருந்து மீட்கப்பட்டரதை தொடர்ந்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
பஞ்சாபில் உள்ள குறிப்பிட்ட நகரத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 12 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *