Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்- கோத்தா வாக்குறுதி

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்- கோத்தா வாக்குறுதி

2005ஆம் ஆண்டுக்கு முன்னர் வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை மூவின மக்களும் சுதந்திரமாக பயணிக்கும் சந்தர்ப்பதை ‘மிலிட்டிரி காரன்’ என இந்த அரசாங்கத்தால் விமர்சிக்கப்படும் நானே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முடித்து வைத்தேன்.தேர்தல் முடிவடைந்து மறுதினம் 17 ஆம் திகதி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பளார் கோத்தாபய ராஜபக்‌ஷ.

இந்தக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அண்மித்த பிரதேசங்களான மதவாச்சி, விளாத்திக்குளம், வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் தீவிரவாதிகள் செய்த நாசகரத்தை நீங்கள் அறிவீர்கள். மரத்துக்கு அடியில்தான் இங்குள்ளவர்கள் அன்று உறங்கினார்கள். இராணுவத்துடன் இணைந்து அந்த யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தேன். 16ஆம் திகதி நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றும் போது நாட்டை மீண்டும் வளப்படுத்தும் எனது கடமை ஆரம்பமாகும்.

நாட்டில் நெல் விளைச்சல் குறைவடைந்துள்ளது. நெல்லுக்கு ஏற்ற விலை வழங்கப்படுவதில்லை. விவசாயமும் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பாரிய கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதியாக பதவியேற்று ஆறுமாத காலத்துக்குள் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்துச்செய்யப்படுமென லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பளார் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

எனது தந்தையும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் ஆரம்பித்த பயணத்தையே நாம் தொடர்கிறோம். எமது பயணத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்துக்காக அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.பௌத்த பூமியில் எமது பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.தேர்தலின் இறுதியில் நாம் பெறும் வெற்றியானது அறுதிப் பெரும்பான்மையுடன் அதிவிசேட வெற்றியாக அமையும் என்பது உறுதியானதும் தெளிவானதுமாகும்.

அரசாங்கத்தின் பிரசார விளம்பரமொன்றில் ‘மிலிட்டிரி காரன்’ ஒருவர் வருகிறார் எனக் கூறப்படுள்ளது. அத்துடன், ‘மிலிட்டிரி காரன்’; அதிகாரத்துக்கு வந்தால் கழிவறைக்கும் சீருடையுடன்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென கூறுகின்றனர். இராணுவ வீரர், கடற்படை வீரர் என்று கூறிய யுகத்தை 2005ஆம் ஆண்டில் நாம் முடிவுக்கு கொண்டுவந்து இராணுவ வீரர்களின் சுபீட்சமான யுகமொன்றையே ஏற்படுத்தினோம்.அத்தகைய இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் போர்க்குற்ற நீதிமன்றங்களுக்கு கொண்டுசெல்லவும் சிறையில் அடைக்கவும் முற்பட்டது. புலனாய்வுத்துறையை நாசமாக்கினர் என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *