Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிலர் பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போடும் எண்ணத்தில் செயற்பட்டு வருகிறார்கள்- ரோசி சேனநாயக்க

சிலர் பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போடும் எண்ணத்தில் செயற்பட்டு வருகிறார்கள்- ரோசி சேனநாயக்க

பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போட நினைக்கும் சிலரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.அவர்களின் கனவு பலிக்காது. அதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்தவுடன் முதல் வேலை பெண்கள் தொடர்பாக அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவது தான்’ என மன்னாரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சிலரைப் போன்று பெண்களின் கண்ணீரோடு அவர் விளையாடவில்லை. அதன் அடிப்படையில் தான் பெண்களின் நலன் சார்ந்து பத்து அம்சங்களை கொண்ட கொள்ளை பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.கடந்த மாதம் கொழும்பில் பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளோம்.இதற்கமைய இந்த நாட்டில் எதிர்காலத்தில் மகளிரான உங்களுக்கு முதன்மையான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை என்று நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அது மட்டுமல்ல மன்னாரில் நான் கவனித்த வகையில் பெண்களின் முன்னேற்றம் என்பது அடி மட்டத்து நிலையில் உள்ளது. இதன்காரணமாக பெண்களின் தொழில் முயற்சிகளுக்கான சகல விடயங்களும் செய்து தரப்படும்.அது மட்டுமல்ல பாடசாலைகளில் படிக்கும் பெண் பிள்ளைகள் பற்றி அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். சிலர் பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போடும் எண்ணத்தில் செயற்பட்டு வருகிறார்கள்.பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போட நினைக்கும் சிலரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *