தலைப்பு செய்திகள்

சீரற்ற காலநிலை : செய்முறை பரீட்சையில் தோற்ற முடியாது போனவர்கள் 1911க்கு அழைக்கவும்

சீரற்ற காலநிலை : செய்முறை பரீட்சையில் தோற்ற முடியாது போனவர்கள் 1911க்கு அழைக்கவும்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் உயர்தர பரீட்சையில் நுண்கலை செய்முறைப் பரீட்சையில் தோற்றமுடியாத மாணவர்களுக்காக வேறொரு தினத்தை பெற்றுக் கொடுப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்தர பரீட்சையில் நுண்கலை செய்முறைப் பரீட்சை இன்று ஆரம்பமாவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். மழை பெய்யும் பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் வெள்ளம் மற்றும் போக்குவரத்து சிரமங்களினால் பரீட்சைக்கு தேற்றமுடியவில்லையென்றால் அவ்வாறான மாணவர்கள் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களிற்கு செயன்முறைப்பரீட்சைக்கு தோற்றுவதற்று வேறொரு தினம் வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *