Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீள்பரிசீலனை செய்ய ஆளுநர் இணக்கம் -மாவை

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீள்பரிசீலனை செய்ய ஆளுநர் இணக்கம் -மாவை

சுகாதாரத் தொண்டர்கள் தெரிவில், தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை விசாரிப்பதற்கும் தவறுகளை நிவர்த்தி செய்து அதிகமானோரை உள்வாங்கி நியமனம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் என்னிடம் உத்தரவளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்தெரிவித்துள்ளார்.அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் கொண்ட குழுவினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் தொடர்பாக முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால், அதனை விசாரிக்குமாறும் அதுவரையில் நியமனம் வழங்குவதை நிறுத்திவைக்குமாறும் நான் ஆளுநரிடம் வலியுறுத்தினேன்.

மேலும் அவர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்த கூடாதென்றும் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்ள இடமளிக்க வேண்டுமென்றும் பொலிஸாரிடமும் ஆளுநரிடமும் கூறினேன்.அதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் கொண்ட குழுவினருடன் தான் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டு, இதற்கான தீர்வை மேற்கொள்வதாக ஆளுநர் என்னிடம் உறுதியளித்தாக தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *