Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுதந்திர தின நிகழ்வின்போது இடமாறி இறங்கிய பராசூட் வீரர்!

சுதந்திர தின நிகழ்வின்போது  இடமாறி இறங்கிய பராசூட் வீரர்!

கொழும்பு காலிமுகத்திடலில் இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற போது, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அத்துடன், பராசூட் வீரர்களின் சாகச நிகழ்வும் நெடைபெற்றது.

இதன்போது, சுமார் 10,000 அடி உயரத்திலிருந்தும் பராசூட் வீரர்கள் விமானத்திலிருந்து கீழே குதித்தனர்.

இவ்வாறு குதித்த வீரர்கள், சரியான இடத்தில் தரையிறங்கினர்.

ஆனால் ஒரு வீரர் மாத்திரம் இடமாறி இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக தரையிறங்கிய வீரரே, கொழும்பு துறைமுகம் உள்ள பகுதியில் தரையிறங்கினார்.

அவரை மீட்க, படகுகளும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 7 ஆயிரத்து 782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *