Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுமந்திரனுடன் செல்வம் அடைக்கலநாதன் இரகசியப் பேச்சு

சுமந்திரனுடன் செல்வம் அடைக்கலநாதன்  இரகசியப் பேச்சு

உள்ளுராட்சி சபை தேர்தல் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக ரெலோ அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனின் இம் முடிவு ரெலோவின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று இரவு ரெலோவின் தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையில் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசியப் பேச்சுக்கள் நடத்தியமை தொடர்பாக தமக்கு தெரியாதென தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *