Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் கோ ட்டாபாயவிற்கு வாக்களிக்கமாட்டார்கள்-.வி.விக்னேஸ்வரன்

சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் கோ ட்டாபாயவிற்கு வாக்களிக்கமாட்டார்கள்-.வி.விக்னேஸ்வரன்

கோட்டாபய ராஜபக்சவிற்கு சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. கடைசிக்கட்ட யுத்தத்தில் நிராயுதபாணியாக சரணடைய சென்றவர்களை கொல்ல உத்தரவிட்டவர் அவராகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல கொடுமைகளை அவர் செய்தார்.கோட்டாபயவை வேட்பாளராக்கும் மஹிந்தராஜபக்சவின் முடிவு தவறானது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் யாராவது ஒரு சிங்களவர்தான் வெல்லப்போகிறார். தமிழர் ஒருவர் போட்டியிடுவதால் எந்த பலனுமில்லை. ஆனால் மூன்றாவது நபருக்கு வாக்களிப்பதால் தமிழர்களின் மனநிலையை உலகிற்கு புரிய வைக்கலாம்.சுதந்திரக்கட்சியில் போட்டியிட என்னிடம் யாரும்ம் கேட்கவில்லை. சில காலத்தின் முன்னர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார். விக்னேஸ்வரன் விரும்பினால் சுதந்திரக்கட்சியில் போட்டியிடலாம என. அதை வைத்து யாரோ கிளப்பிய வதந்தி இது. நான் அப்படி சொல்லவில்லை என விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியில் போட்டியிட போகிறார் என சிலரால் பரப்பப்பட்டு வந்த வதந்தி குறித்து தெளிவுபடுத்தியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *