Search
Saturday 30 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.கவை மீட்டெடுக்கும் மாநாட்டுக்கு சென்ற அமைப்பாளர்களை நீக்க முடிவு

சு.கவை மீட்டெடுக்கும் மாநாட்டுக்கு சென்ற அமைப்பாளர்களை நீக்க முடிவு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் நடத்தப்பட்ட நேற்றை மாநாட்டிற்கு சென்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அந்த பதவிகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடத்தப்பட்ட கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் தலைமையில் கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் மாநாடு நடத்தப்பட்டதுடன் இதில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இது தொடர்பாக நேற்று இரவு மத்திய செயற்குழுவை கூட்டிய சுதந்திரக் கட்சியினர் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *