Search
Saturday 24 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.க அரசாங்கத்திலிருந்து விலக தயாரா?

சு.க அரசாங்கத்திலிருந்து விலக தயாரா?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியை அடைந்துள்ள நிலையில் அரசாங்கத்திலுள்ள அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினரை இணைத்துக்கொண்டு எதிர்க்கட்சியில் அமர்வதே பொறுத்தமானது என கட்சி தலைமைத்துவதற்திற்கு தெரிவித்து வருவதாகவும் இதன்படி அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பை விரைவில் அந்தக் கட்சி வெளியிடலாம். எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகும் பட்சத்தில் அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி எதிரணி உறுப்பினர்கள் சிலரின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *