Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சு.க தலைமைத்துவம் தொடர்பாக சந்திரிக்கா அதிருப்தியில்

சு.க தலைமைத்துவம் தொடர்பாக சந்திரிக்கா அதிருப்தியில்

தற்போது இருப்பது நான் அறிந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியல்லவெனவும் அந்த கட்சியில் தற்போது முன்பிருந்த தலைவர்களின் கொள்கைகள் தற்போதைய தலைவர்களுக்கு மறந்து போய்விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று யக்கல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு தெரிந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியல்ல இப்போது இருக்கின்றது. எனது அப்பா , அம்மா மற்றும் நான் கட்டியெழுப்பிய கட்சியல்ல தற்போது இருப்பது . இதனால் இது பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *