முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் கடந்த 14.08.2006 அன்று விமானப்படையினரின் விமானத்தாக்குதலில் 61 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும். அதனை முன்னிட்டு வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு நாளான இன்று , விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் காலை 7.05 மணிக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.(15)

Previous Postகோட்டாபயவுக்கும் அவரது குடும்பத்தினருக்குமே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும்-காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்
Next Postஐ.நா விசேட அறிக்கையாளர் கொழும்பு வருகிறார்