Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸின் வேகம் குறைந்த கால்கள் தடுமாறுகின்றன

சென்னை சுப்பர் கிங்ஸின் வேகம் குறைந்த கால்கள் தடுமாறுகின்றன

2007-2008 இல் ராகுல் டிராவிட் கங்குலி விவிஎஸ்லக்ஸ்மன் ஆகியோர் மிகவும் மந்தகதியில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றனர் என்ற அடிப்படையில் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்டவேளை அந்த அணியின் தலைவராக மகேந்திரசிங் டோனி விளங்கினார்
2012 இல் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில் சச்சின் கம்பீர் மற்றும் விரேந்திரசேவாக் மூவரையும் அணியில் சேர்த்தால் அவர்களது மெதுவான களத்தடுப்பு காரணமாக அணி 20 மேலதிக ஓட்டங்களை கொடுக்கவேண்டியிருக்கும் என டோனி தெரிவித்திருந்தார்
2018 ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை அணியின் வீரர்கள் களத்தடுப்பில் தடுமாறுவதை டோனி பார்க்க நேர்ந்தது.
பிராவோவின் அதிரடி காரணமாக அணி கரைசேர்ந்தாலும் விக்கெட்களிற்கு இடையில் ஒடுவதிலும் களத்தடுப்பிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தடுமாறியதை காணமுடிந்தது.
மும்பாய் அணி 20 ஓட்டங்களிற்கு இரண்டு விக்கெட்களை இழந்திருந்தவேளை இசான் கிசான் அடித்த பந்தை பிராவோ தடுக்க தவறினார் அது எல்லைக்கோட்டை தொட்டது.
அடுத்த பந்தை இந்தியாவின் சிறந்த களத்தடுப்பு வீரர் என கருதப்படும் ரவீந்திர ஜடோஜா சரியாக கணிக்காததால் அது எல்லைக்கோட்டிற்கு மேலாக சென்றது- ஆறு ஓட்டங்கள்
அடுத்த பந்தையும் பிராவோ தடுக்க முடியாமல் தடுமாறினார்.
அடுத்த பந்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனையும் சென்னை அணியினர் தவறவிட்டனர்
மிகவும் மதிநுட்பம் வாய்ந்த அணித்தலைவர் என்ற அடிப்படையில் டோனியால் தனது மோசமான களத்தடுப்பு வீரர்களை அதிகம் தேவைப்படாத பகுதிகளில் களத்தடுப்பில் நிறுத்தமுடியும்.
ஆனால் சென்னை அணியின் 11 வீரர்களும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளதும் காயங்களை எதிர்கொள்ள கூடிய நிலையில் அவர்கள் உள்ளதுமே தற்போது பிரச்சினையாக உள்ளது
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் மைக்கல் ஹசி இதனை ஏற்றுக்கொண்டாலும் ரி20 போட்டியில் அனுபவமும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்
களத்தடுப்பே எங்களை பொறுத்தவரை சவாலாக இருக்கப்போகின்றது எங்கள் அணியில் 30 வயதை கடந்த வீரர்கள் உள்ளனர் பலர் அதனை எதிர்மறையாக பார்க்கின்றனர் என ஹசி தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் அதனை சாதகமான விடயமாகவே பார்க்கின்றேன் அனுபவமே இவ்வகை போட்டிகளில் முக்கியம் என நான் கருதுகின்றேன் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசத்தை அதுவே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவங்கள் காரணமாக அவர்களால் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *