Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம்

சென்னை- யாழ்ப்பாணம்  விமான சேவை ஆரம்பித்து வைப்பதில் எயார் இந்தியா பெருமிதம்

சென்னை விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும் முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத்துக்கான சேவை அமையவுள்ளது.இந்த சேவை ஆரம்பிக்கப்படுவது பெருமைமிக்க ஒரு தருணமாகும்” என தெரிவித்துள்ளார்.chennai-jaffna-air-india-3-720x450

இந்நிலையில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு ஏர் இந்தியாவின் அலைன்ஸ்ஏர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *