Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு

இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.201910111350302652_2_AthiA0193._L_styvpf

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானம் மூலம் பகல் 1.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவருடன் 200 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினரும் வந்தடைந்தனர்.

மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றார்கள்.தமிழக பாரம்பரியப்படி கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.201910111350302652_1_AthiA0180._L_styvpf

பின்னர் சீன அதிபர் பயன்படுத்தும் ஹாங்கி 5 எல் ரக பிரத்யேக காரில் ஏறி கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ஜி ஜின் பிங் சென்றார். இதனையடுத்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *