Search
Tuesday 15 January 2019
  • :
  • :

செம்பியன்பற்றில் இளைஞர்கள் கைதான விவகாரம்! : நடந்தது என்ன? சபையில் விளக்கிய சுமந்திரன்

செம்பியன்பற்றில் இளைஞர்கள் கைதான விவகாரம்! : நடந்தது என்ன? சபையில் விளக்கிய சுமந்திரன்

வடக்கில் செம்பியன்பற்று பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு தான் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கவில்லையெனவும் குறித்த இளைஞர்கள் கைதான சம்பவம் கஞ்சாவுடன் தொடர்புபட்டது அல்லவெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட எம்.பியான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் அவர் அதனை தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச சபையில் உரையாற்றும் போது கஞ்சாவுடன் கைதானவர்களை விடுவிக்குமாறு சுமந்திரன் பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி தான் அவ்வாறு இளைஞர்களை விடுவிக்குமாறு பொலிஸாரை அச்சுறுத்தவில்லையென தெரிவித்ததுடன் அந்த சம்பவம் தொடர்பாகவும் விளக்கி கூறினார்.
தான் குறித்த பகுதியில் பாடசாலையொன்றில் நடக்கவிருந்த நிகழ்வொன்றுக்கு செல்லவிருந்த நிலையில் அதற்கு முதல் நாள் மாலை சந்தேகத்திடமான முறையில் அங்கும் இங்கும் பயணித்த வாகனமொன்றில் பயணித்தவர்களை விசாரித்த போது அவர்கள் தாங்கள் பொலிஸார் என கூறியுள்ளனர். இதன்போது அடையாளர் அட்டையை காட்டுமாறு இளைஞர்கள் கோரிய போது அவர்கள் கைத்துப்பாக்கியை காட்டி அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளதோடு, இராணுவத்திற்கும் அறிவித்துள்ளார்கள். இராணுவம் அவர்களது வாகனத்தை மறித்து உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக சுமந்திரன் விளக்கினார்.
அவர்கள் உண்மையான பொலிஸார் என பின்னர் அறியப்பட்டபோதும், இளைஞர்கள் தம்மை தாக்கியதாக பொலிஸார் முறைப்பாடு செய்ததால் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். அதன் பின்னர் தாம் பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக விசாரித்ததாக குறிப்பிட்டார். இதேவேளை, அந்த இளைஞர்களிடம் கஞ்சா இருக்கவில்லை என்றும், அவர்கள் விடுவிக்கப்பட்டதை மறுநாளே தாம் கேள்விப்பட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.எனினும், அந்த இளைஞர்களிடம் கஞ்சா காணப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்குமாறு தான் அழுத்தம் கொடுத்ததாகவும் வெளியான செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையென சுமந்திரன் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *