Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

செம்மலையில் தமிழர்களின் உரித்தை நிலைநாட்ட திரண்ட மக்கள்

செம்மலையில் தமிழர்களின் உரித்தை நிலைநாட்ட திரண்ட மக்கள்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா தற்போது இடம்பெற்று வருகிறது.அதிகாலையில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பண்டம் எடுத்துவரும் நிகழ்வு ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து அபிசேகம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு பொதுமக்கள் குறிப்பாக இளைஞா்கள் கலந்து கொண்டுள்ளதுடன் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளமையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர்களின் உரித்தை நிலைநாட்டும் வகையில் இன்றைய தினம் காலை 108 பானைகளில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் வடக்கு அரசியல் தலைவர்களும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அதிகாரத்தரப்புக்களின் பின்னணியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சி பல வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதுடன், இந்த கோயில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *