Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சோதனை நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு களனி பல்கலைக்கழகம் முடக்கம்

சோதனை நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு களனி பல்கலைக்கழகம் முடக்கம்

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இன்று வியாழக்கிழமை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது மாணவர்கள் இன்று காலை எதிர்ப்பு வெளியிட்டமையினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தாக்குதல்களைத் தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சில நாட்கள் மூடப்பட்டிருந்தன. பின்னர் ஓரளவு சுமூகமான சூழ்நிலை நாட்டில் நிலவியதைத் தொடர்ந்து பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.எனினும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயிலில் படையினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *