Search
Tuesday 19 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதிக்கு மனநோய் பரிசோதனை செய்யும் வகையில் சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் : பொன்சேகா

ஜனாதிபதிக்கு மனநோய் பரிசோதனை செய்யும் வகையில் சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் : பொன்சேகா

அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை இரண்டு வாரங்களுக்கு மனநோய் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை போன்று இங்கும் செய்யும் வகையில் சட்டத்தை கொண்டு வர வேண்டுமென ஐ.தே.க எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்திலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது தெரிவிக்கையில்,
ஜனாதிபதி என்னை அடிக்கடி விமர்சிக்கின்றார். ஆனால் நான் சில விடயங்களை கூற வேண்டும் நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தால் தற்போதைய ஜனாதிபதி போல் செயற்பட்டிருக்கமாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் காலை வாரியிருக்கமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன். வாரம் ஒருதடவை வெளிநாட்டுக்குப் பயணம் செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை ‘ஜனாதிபதி தாத்தா’ என்று பெயர் வைத்து மகளின் பெயரில் வெளியிட்டிருக்கமாட்டேன். இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி மைத்திரி பேசி வருகின்றார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும். அதற்கு ஏற்றவகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம்” – என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *