Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு குறித்து கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை-சித்தார்த்தன்

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு குறித்து கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை-சித்தார்த்தன்

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தாம் ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத இவர்கள், தேர்தலின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் சர்வதேசம் வழங்கும் உத்தரவாதத்திற்கு அமைவாக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தீர்மானிப்போம் என தெரிவித்த அவர், இந்த உத்தரவாதத்தை எந்த நாடு வழங்கும் என்பது கேள்விக்குறியான விடயம் என்றும் கூறினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *