Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது

ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது

இலங்கை வங்கியிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்ட நபரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டு போலி பத்திரமொன்றை தயாரித்து மோசடியில் ஈடுப்பட்டமை தொடர்பில் மத்திய வங்கியின் இடைநிறுத்தப்பட்ட ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறிப்பிடப்பட்ட ஆவணம் ஒன்று ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு சமமான கையொப்பத்துடன் வங்கியின் தலைவருக்கு கையளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அது தொடர்பான கலந்துரையாட வருமாறு நேற்று (03) அழைக்கப்பட்ட சந்தேக நபர் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து சந்தேக நபரின் வீட்டில் இருந்து லப்டொப், பென்ரைவ் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுது.மே 28ம் திகதி இலங்கை வங்கியின் தலைவருக்கு கையளிக்கப்பட்ட போலி ஆவணத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *