Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இரசாயன ஆயுதத்தை விட ஆபத்தானதே : ஜே.வி.பி

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இரசாயன ஆயுதத்தை விட ஆபத்தானதே : ஜே.வி.பி

இரசாயன ஆயுதத்தைவிட, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை மிகவும் ஆபத்தானது. என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
நேற்று பாராளமன்றத்தில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 40 வருடங்களாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையானது எமது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. இரசாயன ஆயுதத்தைவிட இது மிகவும் ஆபத்தாகும். நிர்வாகக்கட்டமைப்பு, நாடாளுமன்றம், நீதித்துறை என அனைத்திலும் நிறைவேற்று அதிகாரம் ஆதிக்கம் செலுத்தியது. இதனால், பல பாதகமான விளைவுகள் ஏற்பட்டன. இதனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்டுவேன் என அறிவிப்பு விடுத்துவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்குவந்தார். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார். அதிகாரத்தை எவ்வாறு தக்கவைப்பது, மீண்டும் எப்படி போட்டியிடுவது என்பது குறித்தே சிந்தித்துவருகிறார். எனவே, 2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி காலை தாம் எப்படி இருந்தோம் என்பதை ஒருமுறை ஜனாதிபதி சிந்தித்து பார்க்கவேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *