தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் கோருவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தினம் மற்றும் முடியும் தினம் தொடர்பாக நீதிமன்றத்திடம் கோருவதற்காக ஜனாதிபதியிடம் யோசனையை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
2015 மே மாதத்திலேயே 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் அப்போதிருந்து 5 வருடங்களின் பின்னரே ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர். -(3)
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் கேட்க தயாராகும் சுதந்திரக் கட்சி
Jul 22, 20190

Previous Postஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது : வர்த்தமானி வெளியீடு
Next Postகோதாவே வேட்பாளர் என நான் கூறவே இல்லை : என்கிறார் மகிந்த