Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த விக்னேஷ்வரன் காணாமலாக்கப்பட்டோர், காணிப்பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

ஜனாதிபதியை சந்தித்த விக்னேஷ்வரன் காணாமலாக்கப்பட்டோர், காணிப்பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஐனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்ட மா அதிபர், அமைச்சர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கூறினார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டில் 3800 ஏக்கர் மாத்திரமே இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு ஏனையவற்றை மக்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறியதாக, இந்த கலந்துரையாடல் தொடர்பான வடமாகாண முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், 1500 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *