Search
Monday 16 September 2019
  • :
  • :

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கல்வி அமைச்சருக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கல்வி அமைச்சருக்கு அழைப்பு

கடந்த 4 ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.இந்நிலையில் அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக சேவையாற்றும் எம்.கே.பீ.இலங்கசிங்க, தனக்கு எதிராக கல்வி அமைச்சரால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களில் விடயத்திற்குபொறுப்பான அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்பட்டமை தொடர்பாக சாட்சியம் வழங்கிய எம்.கே.பீ.இலங்கசிங்கவை இடமாற்றம் செய்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார்.இந்நிலையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவரை மீண்டும் அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக ஆணைக்குழு நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பின்னர், எம்.கே.பீ. இலங்கசிங்கவிற்கு எதிராக கல்வி அமைச்சினால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில் அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக சேவையாற்றும் எம்.கே.பீ.இலங்கசிங்க, தனக்கு எதிராக கல்வி அமைச்சரால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய அமைச்சருக்கு எதிராக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *