Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி ஆதரவு அளிக்க மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அவசியம் : விக்னேஸ்வரன்

ஜனாதிபதி ஆதரவு அளிக்க மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அவசியம் : விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் அவர்களின் வாய் மூல உறுதிமொழி அடிப்படையில் ஆதரவு வழங்க முடியாது என்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்காக ஆதரவு அளிக்க முடியும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதற்கு முன்னதாக நாம் மூன்றாம் தரப்பு மத்யஸ்தத்தை கோருகிறோம். இதில் இந்தியாவுக்கு முதன்மை அளிக்கப்படவேண்டும்.

தீர்வுக்கான ஒரு திட்டத்துடன் வரும் எவருக்கும் ஆதரவு நாம் ஆதரவு அளிக்கமுடியும். எந்த ஒரு தீர்வும் தெற்கில் இருந்து முன்வைக்கப்படவேண்டும். சட்டரீதியாக எமக்கு எது உரித்துடையதோ அதையே நாம் கேட்போம். 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தும் தொடர்பில் எமது சார்பாக இந்தியாவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியா மத்தியஸ்தம் வகித்தால் நாம் மகிழ்வடைவோம். வட – கிழக்கு தமிழ் மக்களுக்கு தாம் தவறு இளைத்துவிட்டோம் என்று தெற்கு உணரும்போதே தீர்வு வர முடியும். எமது பிரச்சினைகளை புரிந்துகொண்டு ஏற்றுகொள்ளக்கூடிய இறுதி தீர்வு ஒன்றை முன்வைக்கும் எவரையும் நாம் ஆதரிப்போம். இது தொடர்பில் ஒரு இணக்கத்தை எட்டுவதற்கு மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அவசியம். என்று விக்னேஸ்வரன் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *