Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி செயலகம் விளக்கம்

ஜனாதிபதி செயலகம் விளக்கம்

தனது பதவிக் காலம் எப்போது முடிகின்றது என ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயத்தை கோரியமை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன. இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடன், ஜனாதிபதி அவர்கள் தமது பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு அவ்வாறு விளக்கம் கோருவதற்கான அதிகாரம் காணப்படுவதுடன், இதற்கு முன் பதவிவகித்த ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலம் தொடர்பாக இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளனர். இது ஜனநாயக ஆட்சியமைப்பின் அரசியலமைப்பில் காணப்படும் ஒரு விசேட அம்சமாகும். என குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *