Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பாக நீதிமன்றத்திடம் கோரியது ஏன்?: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதிருப்தி

ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பாக நீதிமன்றத்திடம் கோரியது ஏன்?: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதிருப்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலம் தொடர்பாக நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரியிருப்பது ஐக்கிய தேசிய உள்ளிட்ட தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சிக்களுக்கிடையே அதிருப்தி நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்காளி கட்சிகளுடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாதிபதி இவ்வாறு பதவிக் காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் கோரியிருப்பது அந்த கட்சிகளுக்கு அரசியலில் நெருக்கடி நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கட்சிகள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் இவ்வாறாக கோரிக்கையை விடுக்கும் வரை அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக எதனையும் அறிந்திருக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவர செயற்பட்ட கட்சிகளுக்கும் அது தெரியாது. இதனால் அந்த கட்சிகள் அரசியல் ரீதியிலான நெருக்கடி நிலைமைகளை எதிர்க்கொண்டுள்ளதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *