அமைச்சர் ரிஷாத் பதியூதின் ஆளுனர்களான அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் தனது பிரதிநிதி ஊடாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று இரவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)
